இஸ்லாமியர்களில் சிலருக்கு தொழுகையில் கலந்துகொள்ளாமல் இருப்பது தவறு என்ற நம்பிக்கை இருக்கலாம். ஆனால், கிரிமினல் குற்றத்தைப் போல இப்படி தண்டனை விதிப்பது சரியான அணுகுமுறை அல்ல”
மலேசியாவில் தொழுகையில் பங்கேற்கத் தவறிய 6 முஸ்லிம்கள் இஸ்லாமிய சட்டங்களை மீறியதாகக் கூறி சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள டெரெங்கனு மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் ஆறு பேர் கலந்துகொள்ளவில்லை என அவர்கள் மீது கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டது. 17 முதல் 35 வயது வரை இருக்கும் அந்த இளைஞர்கள் தொழுகைக்கு வராமல் அருகில் ஒரு நீர்வீழ்ச்சிக்கு பிக்னிக் சென்றுள்ளனர்.
இதுதொடர்பான வழக்கு அங்குள்ள ஷரியா முஸ்லிம் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கும் ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2,400 முதல் 2,500 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டள்ளது. இந்திய மதிப்பில் இது 40,000 ரூபாய் முதல் 42,000 ரூபாய் வரை இருக்கும்.