கால் டிராப் ஏற்பட காரணம் என்ன

ஒவ்வொரு நெட்வொர்க் ஆப்ரேட்டர்களின், நெட்வொர்க் செயல்திறனை கண்டறிய இந்த கால் டிராப் ஒரு முக்கியமான காரணியாகும். மேலும், சரியான நெட்வொர்க் ரேடியோ கவரேஜ் இல்லாமை, மற்ற நெட்வொர்க்களின் குறுக்கீடு மற்றும் நகரமைப்பு மாற்றங்கள் போன்றவற்றாலும் கால் டிராப் ஏற்படுகிறது. அடுக்கி அடுக்கிக் கட்டப்படும் பல மாடிக் கட்டடங்களாலும், நெருங்கி வாழும் மக்கள் தொகையினாலும் செறிவற்ற சிக்னல்களை மட்டுமே பெறுகின்றனர். இதனாலேயே கால்டிராப் தொடர்பான புகார்களும் நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.

சமீபத்திய ஆய்வில், 53% மக்கள், கால் டிராப் தொடர்பான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்சனையை தீர்க்க ஏர்டெல் நிறுவனம் WiFi காலிங் என்ற புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது. இது உட்புற செல்போன் கவரேஜைக் அதிகரிக்கும் தன்மையை கொண்டது.

ஏர்டெல் நிறுவனம், 22 மில்லியன் வாடிக்கையாளர்கள் பிராட்பேண்ட் சேவையை பயன்படுத்தி வருவதாக கணக்கிட்டுள்ளது. தற்போது, 6 மில்லியனுக்கும் அதிகமான ஏர்டெல் VoLTE வாடிக்கையாளர்கள் 22 சாதனங்கள் மூலம் WiFi காலிங் வசதியை பெற முடியும் என தெரிவித்துள்ளது. விரைவில் 25 மில்லியன் சாதனங்களை நிறுவி வாடிக்கையாளர்களுக்கு விரைவான சேவையை வழங்கும் என்றும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.