தடையில்லாத சேவைக்கு ஏர்டெல் வைஃபை காலிங்! - பேசிக்கொண்டே இருங்க ஜாலியா

53% மக்கள், கால் டிராப் தொடர்பான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்சனையை தீர்க்க ஏர்டெல் நிறுவனம் WiFi காலிங் என்ற புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.


இப்படி யோசித்து பாருங்கள்.. நீங்க ஒரு முக்கியமான போன் பேசிட்டு இருக்கிறீர்கள் அதுவும் உங்க ஆஃபிஸ் மேனஜரிடம். உங்களோட இந்த வருஷ சம்பள உயர்வு பத்தி பேசிட்டு இருக்கீங்க.. அப்போது.. திடீரென்று வாய்ஸ் மெல்ல மெல்லக் குறைய ஆரம்பிக்கிறது.


நீங்க உடனே உங்க சொகுசான சோஃபாவுல இருந்து எந்திரிச்சி ஜன்னல் இல்லன்னா வெளியே ஓடுறீங்க. அப்போவும் வாய்ஸ் பிரேக் ஆயிட்டே இருக்கு.


ரூம்ல இருக்கிற நாலு மூலையை நோக்கியும் ஓடுறீங்க அப்பவும் வாய்ஸ் சரியா கேட்கலன்னா எப்படி இருக்கும். அந்த போன் மேலயும் நெட்வொர்க் மேலயும் உங்களுக்கு கோபம் வராதா..? இப்படி எல்லாம் ஆச்சுன்னா அந்த முக்கியமான கால நீங்க இழக்க நேரிடும் இல்லையா. இந்தமாதிரியான நிலைமைகளைப் புரிந்துகொண்டுள்ள ஏர்டெல் நிறுவனம் கால் டிராப்களுக்கு ஒரு தீர்வு கொண்டு வந்திருங்காங்க.